இதுவுமது

1120.

வண்டே மடந்தை மணியைம்பான் 2மேவியிருந்
துண்டே யெனநுடங்கு 3முண்மருங்கு 4நோவியீர்
தண்டேன்கா ணீருந் தளிர்மேனி நாற்றத்தாற்
பண்டேபோல் வந்து பயிலாது போமினே.

      (இ - ள்.) வண்டே - வண்டுகளே நீவிர், மடந்தை - சுயம்பிரபையின், மணி
யைம்பால் மேவி யிருந்து - நீலமணி போலும் நிறமமைந்த அளகத்தின் மிசை ஏறி இருந்து,
உன் உண்டே என நுடங்கும் மருங்குல் - அல்குற்கும் முலைகட்கும் இடையே உளதாதல்
வேண்டும் என்று கருதல் அளவையாற் கூறப்படும் ஒல்குதலையுடைய இடையை, நோவியீர்
- வருத்தாதொழிமின், தண் தேன்தாள் - குளிர்ந்த தேன் இனங்காள், நீரும் - நீவிரும்,
தளிர் மேனி நாற்றத்தால் - இவளுடைய மாந்தளிர் போன்ற திருமேனியின் நறுமணத்தை
விரும்பி, பண்டே போல் - முன்காலத்தே போன்று, வந்துபயிலாது போமின் - வந்து
மொய்த்திடாது அகலப்போமின், (எ - று).

பண்டன்று பட்டினம் காப்பு என்றாற்போன்று இன்று அவள் திருமேனி எம்
காவற்கண்ணதாகலின், பண்டுபோல் வந்து பயிலேன் மின் என்றான் என்க. வண்டுகாள் !
இவள் இடை நுண்ணிதாகலின், ஐம்பான் மேவி, அதனை இழக்குமாறு செய்யேன்மின்,
தேன்காள் இவள் மேனி நாற்றம் நுகர்வான் யானுளன், மணமாகாத பண்டுபோல் எண்ணி
அந்நறுநாற்றத்தை விரும்பி வந்து பயிலேன்மின் என்றான் என்க.

( 294 )