வேறு
திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
114. சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் 1சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் 2றறையல் வேண்டுமே.
 

     (இ - ள்.) ஐயற்கு - சிறந்தவனான திவிட்டனுக்கு; சங்கலேகையும் - சங்கத்தின்
வடிவமுள்ள கோடுகளும்; சக்கரலேகையும் - உருளையின் வடிவமுள்ள கோடுகளும்;
அம்கை உள்ளன - அகங்கைகளிலே இருக்கின்றன; ஆதலால் - ஆகையால்;
சங்கபாணியான் - சங்கத்தைக் கையிலேயுடைய திருமாலான இவன்; சக்கர ஆயுதம் -
உருளைப் படையை; அங்கை ஏந்தும் என்று - அகங்கைகளிலே தாங்குவான் என்று;
அறையல் வேண்டும் - கூறுதல் வேண்டும். (எ - று.)

     புகையைக் காணுமிடத்துக் தீயுண்டென்று ஊகித்தறிதல் போலத், திவிட்டன் கையில்
நல்லிலக்கணமாகிய சங்கு சக்கர ரேகைகளைக் கண்டு, இவன் சங்கு சக்கரங்களைக்
கையிலேந்திச் சிறப்படைவான் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். சங்கபாணியான் -
திருமாலின் கூறாகத் தோன்றிய திவிட்டன். ரேகா என்னும் வடமொழி லேகா எனப்
போலியாகித் தமிழ் விதிப்படி ஆ வீறு ஐயாயிற்று.
 

( 45 )

?@