1141. | நிலத்திடை மக்க ளாற்ற னின்னைப்போ லஞ்சு வார்க்கு மலைத்துணை பெருகிக் காட்டு மற்றதிங் கெம்ம னோர்க்கோர் இலைத்தது மில்லை 3மன்னோ வென்றன் னிரண்டு திங்கள் பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்திலங் கெயிற்றி னானே. | (இ - ள்.) பிலத்திடை - மலைமுழையிலே, இரண்டு திங்கள் - இரண்டு பிறைகள், பொடித்தது போலும் - முளைத்ததைப் போன்று, பிறழ்ந்து இலங்கு எயிற்றினான் - ஒளிர்ந்து திகழும் பற்களையுடைய அச்சுவகண்டன், நின்னைப்போல் அஞ்வார்க்கு - உன்னைப் போன்று பெரிதும் அஞ்சுகின்றவர்களுக்கே, நிலத்திடை மக்கள் ஆற்றல் - மண்ணில் வாழும் மானிடர் வலிமை, மலைத்துணை பெருகிக் காட்டும் - மலையினளவிற்றாய் மிகுந்து தோன்றுவதாம், மற்று அது - மற்று அம் மானிடர் ஆற்றல், எம்மனோர்க்கு - எம்மைப் போன்றவர்களுக்கோ, ஓர் இலைத்ததும் இல்லை - ஓர் உடையிலை யளவிற்றாக வேனும் தோன்றுவதொன்றன்றாம், என்றான் - என்று கூறினான், (எ - று.) எயிற்றினான், மக்கள் ஆற்றல் நின்னைப்போல் அஞ்சுவார்க்கு, மலைத்துணை பெருகிக் காட்டும், எம்மனோர்க்கு இலைத்துணைத்தும் ஆகாது என்றான், என்க. இலை - ஈண்டுச் சிறுமைக்கோர் அளவு ஆதலால் உடையிலை என்றாம். | ( 11 ) | | |
|
|