1158. | இரதநூ புரத்தை யாள்வான் புதல்வியை 1யுனைவஞ் சித்துப் 2புரிமனு சர்க்கீ வாக்கே புகன்றனன் போலு மென்ற உரைதனக் குரைத்த வாறே யுரைத்தன னுலக மெல்லாம் இரைதனக் கென்று மாற்றா வெரிபடு வெகுளித் தீயான். | (இ - ள்.) இரத நூபுரத்தை ஆள்வான் - இரதநூபுரச் சக்கிரவாளத்தை ஆட்சி செய்கின்ற சடிமன்னன், உனை வஞ்சித்து - உன்னை வஞ்சனை செய்து, புதல்வியை - தன் மகளாகிய சுயம்பிரபையை, புரிமனுசர்க்கு ஈவாக்கே புகன்றனன் - விழைவுடைய மானிடர்க்குக் கொடுப்பேன் என்னும் சொல்லையே கூறினன், என்ற - என்று ஒற்றரால் தனக்குக் கூறப்பட்ட, உரை - மொழியையே, தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் - தனக்கு ஒற்றர்கள் உரைத்தபடியே எடுத்து மொழிந்தான், உலகம் எல்லாம் - எல்லா உலகமும் ஒருங்கே திரண்டும், என்றும் - ஒருபொழுதேனும், தனக்கு இரை ஆற்றா - தனக்கு இரையாகுதற்குப் போதியவாகா, எரிபடு வெகுளித்தீயான் - பற்றி எரிதலையுடைய சின நெருப்புடையனாகிய அச்சுவகண்டன். ( ) இரத நூபுர,,,,,, போலும் என்னுமளவும் ஒற்றர் கூற்றை அச்சுவ கண்டன் கொண்டு கூறியபடியாம். சினமிகுதியால் அவ்வொற்றர்கூற்றைப் பன்முறையும் திருப்பித் திருப்பிக் கூறினான் என்க. | ( 28 ) | | |
|
|