சடி தன் சுற்றத்தாருடன் ஆராய்தல் | 1188. | ஒற்றனாங் குரைப்பக் கேட்டே யொளியவன் பெயர னோடுஞ் சுற்றமா யவருஞ் சூழ்நீர்ச் சுரமைநா டுடைய கோவு மற்றவன் புதல்வர் தாமும் வருகென 3வந்தார் மாற்ற முற்றவா றறியச் சொன்னா னொளிவரை யரசர் கோவே. | (இ - ள்.) ஒற்றன் ஆங்கு உரைப்பக் கேட்டே - ஒற்றன் அவ்வாறு கூறக்கேட்டு, ஒளிவரை அரசர்கோ - புகழ்மிக்க இமயமலையை ஆளும் மன்னர் மன்னனாகிய சடிவேந்தன், ஒளியவன் பெயரனோடும் - கதிரவன் பெயரைத் தன் பெயராகவுடைய அருக்ககீர்த்தி என்பானுடன், சுற்றம் ஆயவரும் - தம் கேளிர்களும், நீர்சூழ் சுரமைநாடு உடையகோவும் - நீராற் சூழப்பட்ட சுரமை நாட்டையுடைய பயாபதிவேந்தனும், மற்றவன் புதல்வர்தாமும் - அவன் மக்களாகிய விசயதிவிட்டர்களும், வருகென - எம்பால் வருவாராக என்று அழைப்ப, வந்தார் - அனைவரும் சடியரசன்பால் வந்துற்றனராக, மாற்றம் உற்றவாறு - ஒற்றனால் தான் அறிந்த செய்தியை அறிந்தவாறே, அறியச் சொன்னான் - அவர்கள் அறியும்படி கூறினான், ஒற்றன் கூறியதுகேட்ட சடிவேந்தன், அருக்ககீர்த்தி முதலியோரை அழைத்து,அவர்க்கு ஒற்றன் உரைத்த செய்தியை உரைத்தான் என்க. | ( 58 ) | | |
|
|