1208. | தோற்றமுஞ் சுடரொளி வடிவு 2முன்னிலா வேற்றுமை யுடையவாய் விரிந்து தோன்றின மாற்றமஃ தொழிந்தனன் 3மனித்த னன்மையைத் தேற்றினன் றிருமகிழ் தெய்வக் காளையே. | (இ - ள்.) தோற்றமும் சுடர்ஒளி வடிவும் - சாயலும் மிளிருகின்ற ஒளியையுடைய மேனியும், முன்இலா வேற்றுமையுடையவாய் - முன்னர் எக்காலத்தேயும் காணப்படாத வேற்றுமையுடையனவாக, விரிந்து தோன்றின - பாரித்துக் காணப்பட்டன, மாற்றம் அஃதொழிந்தனன் - பேச்சிலாதவனானான், மனித்தன் அன்மையைத் தேற்றினன் திருமகிழ் தெய்வக்காளை - இலக்குமியாகிய சுயம்பிரபையை மணந்து மகிழ்ந்தவனாகிய கடவுட்டன்மையுடைய திவிட்டநம்பி இவ்வாற்றால் தான் மனிதன் அல்லாமையை அறிவிப்பவனாயினன், (எ - று.) நம்பியின் வடிவம் முன்னென்றும் இலாதவாறு பெருகித் தோன்றிற்று. இதனால் திவிட்டநம்பி தான் மானிடன் அன்மையை உலகறியச் செய்தான் என்க. தான் வாசுதேவனே என்பதை உணர்த்தினன் என்பது கருத்து. | ( 78 ) | | |
|
|