இதுவுமது | 1220. | கதிர்மணித் தேர்க்கொடிஞ் சேறிக் காக்கைக ளெதிரெதிர் சிலம்பின வெரிந்த மாதிர முதிரநீர்ப் புதுமழை சொரிந்த துச்சியி னதிர்தரு கவந்தங்க ளாடி யிட்டவே. | (இ - ள்.) கதிர்மணி தேர் கொடிஞ்சு ஏறி காக்கைள் - ஒளியுடைய மணிகள் பதித்த தேரினது கொடிஞ்சுகளிலே காக்கைள் ஏறியிருந்து, எதிர்எதிர் சிலம்பின - மாறிமாறிக் கரைந்தன, மாதிரம் எரிந்த - திசைகள் தீப்பற்றி எரிந்தன, புதுமழை உச்சியின் உதிரநீர் சொரித்த - புதுவதாய மேகங்கள் வானவுச்சியில் கூடிக் குருதி மழை சொரிந்தன, அதிர்ந்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே-ஒளியையுடைய குறைத்தலைப் பிணங்கள் கூத்தாடின, (எ-று.) தேர்க் கொடிஞ்சியினில் காக்கைகள் ஏறி மாறிமாறிக் கரைந்தன; திக்குகள் எரிந்தன; குருதிமழை பொழிந்தது; கவந்தமாடின; என்க. | ( 90 ) | | |
|
|