இதுவுமது

1223. உள்ளடி 3உமைத்துமைத் தழன்ற மேனியுங்
கள்ளவிழ் கண்ணியுங் கரிந்த கண்களு
மெள்ளுநர்க் கிடவயிற் றுடித்த வேழையர்
வள்ளிதழ்க் கருங்கணும் வலந்து டித்தவே.
      (இ - ள்.) உள்ளடி உமைத்து உமைத்து அழன்ற - ஆடவர்களின் உள்ளங்கால்கள்
தினவெடுத்துத் தினவெடுத்து எரிவுற்றன, மேனியும் - உடலும், கள்ளவிழ் கண்ணியும் கரிந்த
தேன் துளிக்கும் மலர்மாலைகளும் கருகிப்போயின, எள்ளுநர்க்கு - திவிட்டன்
முதலியோரை இகழ்கின்ற விஞ்சையர்க்கு, கண்களும் இடவயின் துடித்த - கண்கள்
இடந்துடித்தன, ஏழையர் - மகளிர்களுடைய, வள்இதழ் கருங்கணும் - பெரிய
இமைகளையுடைய கரிய கண்களும், வலம்துடித்த - வலப்பக்கத்தே துடித்தன, (எ - று.)

உமைத்து - தினவெடுத்து: “உமைத்துழிச் சொறியப் பெற்றாம்“ என்றார்
சீவகசிந்தாமணியினும். உள்ளடிக்கண் தினவெடுத்தது; உடலும் மாலையும் கருகின;
ஆடவர்க்கும் மகளிர்க்கும் முறையே கண்கள் இடமும் வலமும் துடித்தன; என்க.

( 93 )