விச்சாதரர் போர்க்குப் புறப்படுதல் | 1227. | ஆழியி னானது கூறலு மாயிடை வாழிய ரோவென மால்வரை 5வாழ்பவர் சூழிய 1வானைகள் மாவொடு தேர்பல 2தாழலர் பண்ணினர் தாமு மெழுந்தார். | (இ - ள்.) ஆழியினான் அது கூறலும் ஆயிடை - அச்சுவகண்டன் அம்மொழி கூறியவுடனே, மால்வரை வாழ்பவர் - பெரிய மலையிடை வாழும் மறவர்கள், வாழியரோ என - வாழ்க என்று அச்சுவகண்டனை வாழ்த்தி, சூழிய ஆனைகள் மாவொடு பல தேர் பண்ணினர் - நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும், குதிரைகளையும் பலவாகிய தேர்களையும் ஒப்பனை செய்தனராய், தாமும் தாழலர் எழுந்தார் - தாங்களும் காலந்தாழ்த்தாமல் விரைந்து போர்க்குப் புறப்பட்டனர், (எ - று.) (1226) இச்செய்யுள்களும் (1227) அடுத்த செய்யுளும் - ஓர் ஏட்டுச் சுவடியில் முன்பின் மாறியுள்ளன என்ப. உடனே மன்னர்கள் படை பண்ணுறுத்தி, விரைந்து போர்க் கெழுந்தனர், என்க. | ( 97 ) | | |
|
|