1229. | குடையுங் கொடியுங் குளிர்சா மரையும் படையும் முடியும் பலசின் னமுமே யிடையும் புடையும் மிருபா லகமு மடையும் 4படையும் மறிதற் கரிதே. | (இ - ள்.) குடையும் கொடியும் குளிர்சாமரையும் - குடைகளும் கொடிகளும் தட்பந்தரும் கவரிமயிர்க் கற்றைகளும், படையும் முடியும் பல சின்னமுமே - போர்க்கருவிகளும் முடிக்கலன்களும் இன்னோரன்ன பிற போர்ச்சின்னங்களும், இடையும் புடையும் இருபால் அகமும் - நடுவிடத்தேயும் முன்பின்னிடங்களினும் இருபக்கங்களின் அகத்தேயும், அடையும் - செறிந்தனவாதலின், படையும் அறிதற்கு அரிதே - அப்படை தானும் யாரானும் அளவிட்டறிதற்கு அரிதாயிற்று, (எ - று.) இதுவும் படையெழுச்சியே கூறிற்று. சின்னம் - தாரை யெனினுமாம். | ( 99 ) | | |
|
|