அருக்க கீர்த்தியின் போர்த்திறம்

1240. ஆரழ லான்பெய ரானணி வெஞ்சிலை
போரழல் வார்கணை மாரி பொழிந்தது
சீர்கெழு விஞ்சையர் செந்தடி நுந்துபு
நீர்கெழு வெள்ள நிரந்ததை யன்றே.
     (இ - ள்.) ஆர் அழலான் பெயரான் அணி வெஞ்சிலை - பொருந்திய
தீப்பிழம்பாயுள்ள கதிரவனுடைய பெயரையுடையவனாகிய அருக்ககீர்த்தி என்பவனுடைய
அழகுடை வெவ்விய வில், போர் அழல் வார்கணை மாரி பொழிந்தது - போரின் கண்ணே
நெடிய தீக்கணைகளை மழைபோலப் பொழிந்ததாக, சீர்கெழு விஞ்சையர் - புகழ்மிக்க
விச்சாதரருடைய, செந்தடி - செந்நிறமான ஊன்றிரளை வரன்றிக்கொண்டு, நீர்கெழு
வெள்ளம் - குருதிநீர் பெருக்காலுண்டாய வெள்ளம், நிரந்ததையன்றே - பரவலாயிற்று, (எ
- று.)

அருக்ககீர்த்தி கணைமாரி பெய்தவுடன் செவ்விய ஊன்றிரளோடே குருதி வெள்ளம்
ஓடிற்றென்க.

( 110 )