1249. இடுதவி சொடுதொடர் 1பிரிய 2வெந்தகத்
தடுசரம் படுதொறு மலறி வாலதி
நெடிதென நிறுத்திநீ ருகுத்து நீள்செவி
மடிதர முடுகின மான யானையே.
     (இ - ள்.) இடு தவிசொடு - எருத்தின்மேல் இடப்பட்ட இருக்கைகளுடனே, தொடர்பு
- வரிசையும், இரிய - குலைந்து ஒழியும்படி, அகத்து - தம் உடலின் ஊடே, அடுசரம்
படுதொறும் - கொல்லுதலுடைய கணைகள் பாயுந்தோறும், வெந்து - மனம்வெம்பி, அலறி -
பிளிறொலி செய்து, நீர் உகுத்து - கண்ணீர்சொரிந்து, நீள்செவி மடிதர - அச்சத்தால்
நீண்ட செவிகள் மடிந்துகிடப்ப, வாலதி நெடிதென நிறுத்தி - தம் வால் நீளிது என்னும்படி
தூக்கி, மானயானை முடுகின - பெரிய யானைகள் விரைந்து புறமிட்டோடின, ஏ : அசை,
(எ - று.)

பகைவர்கள் அணிவகுத்து நடத்திச் சென்ற யானைகள் கணைபடுந் தோறும், அலறிச்
செவிமடிதர, வாலைத் தூக்கிக்கொண்டு உடைந்தோடின, என்க.

( 119 )