இதுவுமது | 1253. | பெரியவாய்ப் 2பிறையெயி றிலங்க நக்குநக் குரியவா ளெரியெழ 3வோச்சி நம்மொடு பொரியவந் தார்களும் புறந்தந் தாரினி யரியதென் னெனநக்கா ரவனி மன்னரே. | (இ - ள்.) பெரிய வாய்ப் பிறை எயிறு இலங்க நக்கு நக்கு - தம் பெரிய வாயின் கண்ணவாகிய பிறைபோன்று வளைந்த பற்கள் திகழும்படி சிரித்துச் சிரித்து, உரிய வாள் எரியெழ - தமக்குரிய வாட்படைகளிலே தீப் பிறக்குமாறு வீசி, நம்மொடு பொரிய வந்தார்களும் - நங்களுடனே போராற்ற வந்த விச்சாதரர்களும், புறந்தந்தார் - நம்மொடு போர் ஆற்ற இயலாதவராய் உடைந்து ஓடினர், இனி அரியது என் என - இனி நாம் ஆற்றுதற்கரிய செயல் யாதுளது என்றியம்பி, அவனி மன்னர் நக்கார் - அம்மண்ணுலகப்பேதை மானிடவேந்தரும் நம்மை இகழ்ந்து சிரிப்பாராயினர், (எ - று.) பொரிய - போர் செய்ய. தம் பெரிய வாயைப் பிளந்துகொண்டு, எயிறிலங்க நக்கு, நக்கு, வாளோச்சிப்பொர வந்தாரும் புறந்தந்தார் என அவனி மன்னர் நக்கார்; என்றான் என்க. | ( 123 ) | | |
|
|