இதுவுமது

1257. பாழிப்போ ருடைந்தனர் பகைவர்க் கின்றென
வாழிப்போர்த் தடக்கையாற் கவர்க ணீர்மையைத்
தாழிப்1பேர் விலன்றம னொருவன் கூறினான்
ஊழிப்பே ரெரியுணெய் 2யுகுத்த தொப்பவே.
     (இ - ள்.) பகைவர்க்கு இன்று பாழிப் போர் உடைந்தனர் என - (அன்னராதலால்)
நம் பகைவர்களுக்கு நம் மன்னர்கள் அப் பகைவரூர்க்கண்ணே போரிற் றோற்றோடினர்
என்று, அவர்கள் நீர்மையை -அம் மன்னர்களின் தன்மையை, தாழிப் பேர்விலன் தமன்
ஒருவன் - கும்பன் என்னும் பெயருடைய விற்படையையுடையான் ஒரு தூதன், ஆழிப்
போர்த்தடக்கையாற்கு - ஆழிப்படையையுடைய போர் ஆற்றல் மிக்க பெரிய
கையினையுடைய அச்சுவகண்டனுக்கு, ஊழிப் பேரெரியுள் நெய் உகுத்தது ஒப்ப -
ஊழிமுடிவின்கண்ணுற்ற பெரிய நெருப்பில் நெய் சொரிந்ததே போன்று, கூறினான் -
சொன்னான், (எ - று.)

பாழி - பகைவர் ஊர். தாழி - கும்பம். தமன் - தமர் என்பதன் ஒருமை; தூதன் என்றபடி.
ஊழிப்பேரெரி சுரமையிலிருந்து வந்த செய்திக்குவமை, நெய் இரதநூதபுரச் செய்திக்குவமை.

( 127 )