அரிசேனன் போர் மேற்கோடல் | 1282. | கேடக மிடத்தது 1வலக்கைகிள ரொள்வா ளாடக மடுத்தவணி பூணனலர் தாரான் றோடக மடுத்த2துதை கண்ணியொடு துன்னா ரூடக மடுத்தொருவ னுந்திநனி வந்தான். | (இ - ள்.) ஒருவன் - ஒரு சிறந்த போர் மறவன், இடத்தது கேடகம் - தன் இடக்கையின்கண் கிடுகுபற்றியவனாய், வலக்கை - தன் வலக்கையில், கிளர் ஒள்வாள் - மன எழுச்சிக்குக் காரணமான ஒளிமிக்க வாட்படையுடையனாய், ஆடகம் அடுத்தஅணி பூணன் - பொன்னாலியன்ற அழகிய அணிகலன்களையும், அலர் தாரான் - மலர்மாலையையும் அணிந்தவனாய், தோடு அகமடுத்ததுதை கண்ணியொடு - இதழ்களால் செறிவுடைய முடிமாலையைச் சூடியவனாய், துன்னார் ஊடுஅகம் அடுத்து - பகைவருடைய அணியினூடே புகுந்து, உந்தி - அவர்களை வெருண்டடோடச் செய்து, நனி வந்தான் - விரைந்து போர் ஆற்றியபடியே வருவானாயினன், (எ - று.) ஒருவன் என்றது அரிசேனனை. ஒருகையில் கிடுகுபற்றி ஒரு கையில் வாள்கொண்டு அணிகலன்களையும் மாலையையுமுடைய ஒரு மறவன் தமியனாய்ப் பெரும்படையை ஊடறுத்துப் போராற்றி வந்தான் என்க. | ( 152 ) | | |
|
|