1290. போரிகலி யாரமொடு பூண்மணிகண் மின்ன
நேரிகலும் வாள்களொடு கேடக நிழற்றச்
சாரிகை கறங்கென மலைந்து 1தனி சுற்றி
நீரகவ ளாகமடு சக்கர நிகர்த்தார்.
     (இ - ள்.) போர் இகலி - போர்த்தொழிலின் கண்ணே தம்முள் இகலுடையராய்,
ஆரமொடு பூண்மணிகண் மின்ன - வடங்களினும் கடகமுதலிய பூண்களினும்
அழுத்தப்பட்ட மணிகள் ஒளிபரப்புமாறு, நேர்இகலும் - ஒன்றையொன்று எதிர்ந்து
மாறுபடும், வாள்களொடு கேடகம் நிழற்ற - வாள்களும் கிடுகுகளும் ஒளிரா நிற்ப, மலைந்து
- போர்செய்து, கறங்கெனச் சாரிகை தனிசுற்றி - காற்றாடிபோல வட்டமாக ஒப்பிலா வகை
சுற்றி, நீர் அக வளாகம் - கடல் நடுவண் அமைந்த உலகத்தை, அடுசக்கரம் நிகர்த்தார் -
அழிக்கலுற்றதோர் ஆழியையும் ஒத்துத் தோன்றலாயினர்,
(எ - று.)

இருவரும் கையில் ஒளியுடைய படைகளுடன் காற்றாடிபோன்று சுற்றுதல் உலகத்தை
அழிக்கக் கருதிச் சுழல்கின்ற ஓர் ஆழிப்படையைப் போன்று தோன்றிற்று என்க.

(160)