1300. வந்த வன்பெய
ரிந்தி ரன்னெனுங்
கந்து கொல்களி
றுந்து காமனே.
     (இ - ள்.) வந்தவன் பெயர் - அவ்வாறு வந்த வீரன் பெயர் யாதெனில், கந்துகொல்
களிறு உந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும்,
இந்திரன் எனும் காமனே - இந்திரன் என்று சொல்லப்படும் காமன் என்பான் (எனவே
இந்திரகாமன், என்றபடி,)
(எ - று.)

     கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும் இந்திரன்
பெயரோடு காமன் என்னும் பெயரும் இணைந்த இந்திரகாமன் என்றபடி.

( 170 )