குணசேனனைக் கொல்லுதல்

1303. இட்ட வாள்கர
மொட்டித் தட்டிப்பி
னட்ட மாகென
வெட்டி 1வீழ்த்தினான்.
     (இ - ள்.) இட்டவாள் கரம் ஒட்டித் தட்டிப்பின் - குணசேனன் வீசிய வாளை அவன்
கையாற்பற்றிய இடத்தே தன் கிடுகாலே தடுத்து, நட்டம் ஆகென - இவன்
உயிரிழக்கக்கடவன் என்று, வெட்டி வீழ்த்தினான் - அக்குணசேனன் தலையைத் தன்
வாளாலே வெட்டித் தள்ளினான், இந்திர காமன், (எ - று.)

குணசேனன் வீசிய வாளைத் தன் கிடுகினாற் றடுத்து அவனுடைய தலையை இந்திர காமன்
வெட்டி வீழ்த்தினான் என்க.

( 173 )