இதுவுமது

1311. எரிபோல்வன சுரிபங்கியொ 4டிருள்போலிருண் மெய்யோ
டரிபோலதி ரகல்வானுற நிமிராவடி 5புடையாப்
பரிபோல்வன பிடியாவுட லடியாவிடை 6படுதேர்
பொரிபோலெழ வுதையா7 விவன் வருகின்றதொர் பொலிவே.
      (இ - ள்.) எரிபோல்வன சுரிபங்கியொடு - தீப்பிழம்பு போன்ற சுருண்ட தலைமயிர்க்
கற்றையோடே, இருள் போல் - இருட்டினை நிகர்த்த, இருள் மெய்யோடு - இருண்ட
உடலோடே, அரிபோல் அதிர் - முகில்போல முழங்கி, அகல்வான் உற நிமிரா - விரிந்த
விசும்பளாவ உயர்ந்த உருப்படைத்து, அடி புடையா அடிகளாலே நிலத்தை
அதிரப்புடைத்து, பரிபோல்வன பிடியா - புரவிகள் போன்றவற்றைப் பற்றிப் பிடித்து, உடல்
அடியா - தன் உடலிலேயே மோதிக்கொன்று, இடைபடுதேர் - இவற்றிடையே அகப்பட்ட
தேர்களை, பொரிபோல் எழ உதையா - நெற்பொரிபோன்று துள்ளி எழும்படி காலாலே
உதைத்து, இவன் வருகின்றது ஓர் பொலிவு - இவ்விஞ்சையன் போர் ஆற்றிவரும் ஓர்
அழகு (இவ்வாறிருந்தது,) (எ - று.)

     (1308) எனவுரையா, பின்செல, விளியா (1309) பறியா, அவை கறியா, வாள்
இடையிடையிட்டு உருவா, உயிர் பருகா, உருவா செறியா, (1310) நிமிரா அடிபுடையா,
பிடியா, அடியா, உதையா, இவன் வருகின்றதொர் பொலிவே, என இயைத்துக் கொள்க.

( 181 )