பாக்கு மரங்கள்

132. வேய்நி ழன்னி லாவிலங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்கதிர்ப் 1ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொனாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்துவீழ்வ போன்ற பூக ராசியே.
 

     (இ - ள்.) பூகராசி - கமுகமரக் கூட்டம்; வேய் - அழகிதாகச் செய்கின்ற; நிழல் -
ஒளியினால்; நிலா இலங்கு - திங்களொளி போல் விளங்குகின்ற; வெள்ளி - வெள்ளிய;
விம்மு பாளைவாய் - பருத்த பாளையினிடத்தே; பாய்நிழல் - பரவுகின்ற ஒளியைச்
செய்கின்ற; பசுங்கதிர் - பசிய நிறமான ஒளியையுடைய; பரூஉ மணி - பெரிய
மணிகளைப்போன்ற; குலைகுலாய் - குலைகள் விளங்கப்பெற்று; சேய்நிழல் -
நெடுந்தொலையளவும் ஒளி வீசுகின்ற; செழும்பொனால் - உயர்ந்த பொன்னினால்; திரண்ட
செம்பழத்தவாய் - திரண்டமைந்த சிவந்த பழங்களையுடையனவாய்; நிழல் போய் பொலிந்து
வீழ்வ போன்ற - நிழல் நெடுந்தொலை சென்று பொருந்திப் பொலிதலானே கீழேவீழ்வன
போலுள்ளன. (எ - று.)

     பூகராசி. வெள்ளிநிறமுடைய பாளையிலே பச்சை மணி போன்ற காய்களையுடைய
குலைபொருந்திச் செம்பொன் மயமான பழங்களையுடையன; அவற்றின்நிழல்
நெடுந்தொலையளவும் தரையிற் படிந்திருத்தல் அம்மரங்கள் சாய்ந்து கிடந்தாற்போல்
உள்ளதென்பது ஈற்றடியின் கருத்து. நிழன்னிலா - னகரமெய் விரித்தல் விகாரம்.
பாளைவாய். வாய் - ஏழனுருபு.
 

 ( 14 )