சடிமன்னன் சுவணகேதுவினை அசதியாடல்சுவணகேதுவினைச் சடிமன்னன் எதிர்தல்

1340. குரவ ரென்னு முபசார
     மிருக்க1 கோதை மிளிர் வேலாய்
பொருவ ராயின் யாரோடும்
     பொருவர் பூமி வேண்டு2 பவர்
ஒருவி நிற்ப 3துரங்கொல்லோ
     வென்னு முரையு 4முணர்தியிவண்
இருவே 5முள்ளும் யார்பாலஃ
     துறுவ தென்றா னொளிமுடியான்.
     (இ - ள்.) குரவர் என்னும் உபசாரம் இருக்க - சுவணகேதனனே - நீ, குரவர் என்று
கூறிய மொழி உண்மையுமன்று உபசாரமே ஆம் அது கிடக்க, கோதை மிளிர்வேலோய் -
வெற்றி மாலை சூட்டப்பட்ட வேலையுடையோனே, பொருவராயின் - தம்மோடு எதிர்ந்து
போர் செய்வாரெனில், யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர் - மண்ணாசை பிடித்த
பித்தர்கள் நேருமாயின் தந்தை தாயரோடு கூடப் போராற்றா நிற்பர், ஒருவி நிற்பது
உரங்கொல்லோ என்னும் உரையும் உணர்தி - போர் செய்யாது விலகி நிற்றல்
ஆண்மையோ என முன்னுக்குப் பின் முரணாகப் பேசவும் நீ அறிந்துள்ளாய், இவண்
இருவேம் உள்ளும் - இவ்விடத்தே நிற்கின்ற நம் இருவரிடத்தும், யார்பால் அஃதுறுவது -
யாரிடத்தே அவ்வாண்மையின்மை பொருந்துதற்குரியது, என்றான் - என்று கூறினன், ஒளி
முடியான் - ஒளியுடைய முடியணிந்த சடிமன்னன், (எ - று.)

     சுவணகேது குறித்தபடி சடி குரவன் ஆயின் ஒருவி நிற்றலே ஆண்மையாகும்.
அஃதறியாது ஒருவி நிற்றல் ஆண்மை யாகாது என்ற முரண்பாட்டைக் கூறிக்காட்டி
ஆண்மையாகாமை, உனக்கோ எனக்கோ பொருந்துவது சிந்தித்துக் கூறு என்றான்.
நீங்கள் மண்பித்துப் பிடித்தன்றோ இப்போர்க்கு எழுந்தீர், நுமக்கும் அறமுளதோ என்று
சடி இகழ்கின்றான்.

( 210 )