சுவணகேதுவின் பிதற்றுரை | 1341. | ஆக வமைக வதுவேயவ் வரசநீதி 6யாகிவிடிற் போக பொருவ னெனப்புகைந்து பொருவெஞ் சிலையொன் றிடனேந்தி வேக யானை செலவுந்திச் சிறுநா 1ணெறிந்து வெஞ்சரங்கண் மாக மெல்லா முடனடுங்கத் தொடங்கி னானம் மழைபோல்வான். | (இ - ள்.) ஆக - அவ்வாறாயின் ஆகுக, அமைக - அஃதமைவதாக, அதுவே அரசநீதி ஆகிவிடில் - அதுவே அரசர்க்குரிய அறமாய் விட்டால், போக - போவதாக. பொருவன் என - நான் இப்போது உன்னுடனே போர் செய்யா நிற்பேன் என்று வாய்தந்தன பிதற்றி, புகைந்து - உள்ளம் புகைந்து, பொரு வெஞ்சிலை ஒன்று இடன் ஏந்தி - போர் செய்தற்குரிய வெவ்விய வில் ஒன்றனைத் தன் இடக்கையின் ஏந்தி, வேக யானை செல உந்தி - சினமிக்க யானையை முன் செல்லக் கடாவி, சிறு நாண் எறிந்து - வில்லினது சிறிய நாணைத் தெறித்து, வெஞ்சரங்கள் - வெவ்விய அம்புகளை, மாகம் எல்லாம் உடன் நடுங்க - திசைகள் நடுங்கும்படி, தொடங்கினான் - தொடுக்கத் தொடங்கினான், அம்மழை போல்வான் - அம்புமாரி பெய்யும் மழையை நிகர்த்த அச்சுவணகேது, (எ - று.) சடிமன்னன் மொழிக்குத் தகுந்த மறுமொழி கூற வகையின்றி ஆக, அமைக, அதுவே போக, வென்று சுவணகேது பிதற்றினான் என்க. | ( 211 ) | | |
|
|