சுவணகேது பல்வேறு படைகளாற் போர்செய்தல் | 1347. | அம்புஞ் 1சிலையுங் கைம்மறிய வகத்த விஞ்சை துணிப்புண்டு வெம்பு கின்ற 2மனத்தினனாய் வெய்யோன் மீட்டும் 3விறலோன்மேல் வம்பு கொண்ட வளையங்கள் கணையம் விட்டு விட்டேறு செம்பொன்னாழி 4யிவையெல்லாஞ் சென்று பாயச் சிந்தித்தான். | (இ - ள்.) அம்பும் சிலையும் கைம்மறிய - தன் அம்புகளும் வில்லும் தன் கையகத்தினின்றும் ஒழிந்தனவாக, அகத்த விஞ்சை துணிப்புண்டு - உள்ளத்தே சிந்தித்த மாயவித்தையும் கெட்டொழிய, வெம்புகின்ற மனத்தினனாய் - புழுங்கும் மனத்தையுடையவன் ஆகி, வெய்யோன் - கொடியவனாகிய சுவணகேது, மீட்டும் - மீளவும், விறலோன் மேல் - வெற்றியையுடைய சடியரசன் மேலே, வம்புகொண்ட - புதுமையுடைய, வளையங்கள் கணையம் விட்டு விட்டேறு செம்பொன் ஆழி - ஆழிகள் தடிகள் எறிகற்கள் வேல், செவ்விய பொன்னாலியன்ற உருளை ஆகிய, இவை யெல்லாம் - இன்னோரன்ன போர்க் கருவிகள் அனைத்தும், சென்று பாய சிந்தித்தான் - சென்று தாக்குமாறு வீசினான், (எ - று.) சிந்தித்தல் - சிந்துதல், வில்லம்புகளும் மனத்தே கொண்ட மாயமும் அழிந்தொழிந்தவுடன் சுவணகேது ஆழி கணையம் முதலியன சடிமன்னன் மேல் வீசினான், என்க. | ( 217 ) | | |
|
|