விஞ்சையர் படை புறமிடல் | 1351. | தூவி யார்சுவ ணக்கொடி மேவி னான்பட வேமிகை 1மாவி னார்படை வாரிபோர் ஓவி யாங்குடை வுற்றதே. | (இ - ள்.) தூவி ஆர் சுவணக் கொடி - சிறகுகளையுடைய கருடப் பறவையை எழுதிய கொடியை, மேவினான் - மேற்கொண்டவனாகிய சுவணகேது, படவே - போரின்கண்ணே மாண்டு வீழ்தலுமே, மிகை மாவினார் படைவாரி - மிகுதியாய யானை குதிரைகளையுடைய விஞ்சையர் படையாகிய கடல், போர்ஓவி - போர் செய்தலை ஒழித்து, ஆங்கு - அப்பொழுது, உடைவுற்றது - புறங்கொடுத் தோடிற்று, (எ - று.) சுவணகேது மாண்டவுடன் அச்சுவகண்டன் படைகள் புறங்கொடுத்து ஓடலாயின, என்க. | ( 221 ) | | |
|
|