(இ - ள்.) மிகை அஞ்சுவார் விஞ்சை வேந்தர்களே, என - போர்க்களத்தே பெரிதும் அஞ்சுபவர்கள் விச்சாதர மன்னர்களே போலும் என்று கூறி, நஞ்சனார்களை - நஞ்சை யொத்த தன் படை மன்னர்களை, நக்கு - இகழ்ந்து சிரித்து, வைவெஞ்சொல் ஆன விளம்பினான் - வைதற்குரிய சுடுசொற்களைத் தன்னால் இயன்றவரையில் கூறினான், (எ -று.)தம் புகழ் முதலியவற்றை இவர்கள் புறமிட்டுக் கொன்றனராதலின், நஞ்சனார்களை என்றான் - தனக்கு நஞ்சுபோன்றவர்களை என்க. நகுதல் - சினத்தால் நிகழ்வது. வை வெஞ்சொல் - வைவதற்கேற்ற கொடுஞ்சொல். |