இதுவுமது

1356. பொன்று மிவ்வுட லின்பொருட்
டென்று நிற்கு மிரும்புக
ழின்று 2நீர்கழிந் தீர்களாற்
குன்றின் மேற்குடை வேந்திர்காள்.
     (இ - ள்.) குன்றின்மேல் குடை வேந்திர்காள் - அரண்வலிமிக்க மலையுச்சியிலே
மேலும் குடைகவித்து வாழும் வேந்தர்களே!, பொன்றும் இவ்வுடலின் பொருட்டு -
இறந்தேதீரும் எளிய இவ்வுடலைச் சில் பகல் ஓம்பும் பொருட்டு, என்றும் நிற்கும்
இரும்புகழ் - அழியாது எப்போதும் நிலைத்தற்குரிய பெரிய புகழை, இன்று நீர் கழிந்தீர்கள்
ஆல் - இன்று நீயிர் இழந்துவிட்டீரே, ஆல் : அசை, (எ - று.)

“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
     பீடழிய வந்து விடத்து“ (திருக். செய். 968)

என்னும் திருக்குறளை ஈண்டு ஒப்பு நோக்குக.

     குன்றின் மேற் குடைவேந்திர் என்றது இகழ்ச்சி. என்னை ? பகைவர் ஏறுதற்கரிய
குன்றின் உச்சியிலிருத்தலால் நுங்கள் குடையுடன் நீவிர் வேந்தராயிருந்தீர் போலும்,
என்னும் குறிப்பிற் கூறினானாகலின் என்க.

( 226 )