உடைந்த வீரர் மீண்டும் போரேற்றல் | 1358. | ஈண்ட வின்னன சொல்லலு மீண்டு விஞ்சைய ரேற்றனர் ஆண்ட கைச்சுட ராயிடைத் தூண்டி னான்சுடர் வேலினான். | (இ - ள்.) ஈண்ட - நெருங்க, இன்னன சொல்லலும் - இன்னோரன்ன மொழிகளைச் சிறீசேனன் எடுத்துரைத்தவுடனே, விஞ்சையர் மீண்டு ஏற்றனர் - அவ்விச்சாதரர்கள் நாணி மீண்டும் போர் ஆற்றச் சமைந்தனர், சுடர் வேலினான் -ஒளியுடைய வேற்படையுடைய சிறீசேனன், ஆயிடை - அச்செவ்வி தேர்ந்து, ஆண் தகை சுடர் தூண்டினான் - தன் வீர மொழிகள் என்னும் கோலாலே அப்படைஞர்களின் மறத்தன்மை என்னும் விளக்கு நன்கு எரியுமாறு தூண்டிவிட்டான், (எ - று.) ஆண்மையால் வீரர்கள் புகழ்விளக்க மடைதலின் அதனை ஆண்ட கைச் சுடர் என்றார். சிறீசேனன் பல மற மொழிகளால் புறமிட்டோரின் மனத்தைத் தேற்றி அவர்கள் மீண்டும் போர் புரிதற்குரிய துணிவினைப் பெறும்படி செய்தான் என்பதாம். | ( 228 ) | | |
|
|