இதுவுமது

1365.

வாய்ந்த போரிவை வல்லிரே
லேந்து மின்படை போந்தெனக்
காய்ந்த கட்டுரை கேட்டலுஞ்
1சேர்ந்த னன்சிறீ பாலனே.
      இ - ள்.) வாய்ந்த போர் இவை வல்லிரேல் - இவ்விரு வகைப் போரினுள் நுமக்குப்
பொருந்திய போர் என்னோடு ஆற்றவல்லீர் உளீராயின், போந்து படை ஏந்துமின் என -
என் எதிரே வந்து படைக்கலத்தை ஏந்துங்கோள் என்று சிறீசேனன் கூறிய காய்ந்த
கட்டுரை - சினத்தால் எழுந்த அறை கூவும் மொழிகளை, கேட்டலும் - செவியுற்ற
பொழுதே, சிறீபாலன் சேர்ந்தனன் - திவிட்டன் படைத்தலைவருள் ஒருவனான சிறீபாலன்
என்பான் அச்சிறீசேனனுக்கு முன்சென்று சேர்ந்தான், (எ - று.)

     “இவ்விருவகைப் போரினுள் யாது நுமக்கு விருப்பமானது அப்போரே யானும்
செய்வல், வல்லீர் ! வருக!“ என, சிறீசேனன் அறை கூவக் கேட்ட சிறீபாலன் அவன்முன்
சென்றெதிர்ந்தான் என்க.

(235)