சிறீபால சிறீசேனர் போர்த்திறம்

1367. திரிவில் 4சாரி கைச்செயல்
புரவி சேர்ந்து பொங்கின
5வரிவில் வாளி மன்னரு
மருவு 6போர்ம யங்கினார்.
     (இ - ள்.) திரிவு இல் சாரிகைச் செயல் - மாறுபாடிலாத சாரிகைத் தொழிலிலே, புரவி
சேர்ந்து பொங்கின - இருவருடைய குதிரைகளும் பொருந்திச் சினந்தன, வரி வில் வாளி
மன்னரும் - வரிந்த வில்லையும் அம்புகளையுமுடைய சிறீசேன சிறீபாலரும், மருவு போர்
மயங்கினார் -நெருங்கிய போர்த் தொழிலிலே பொருந்துவாராயினர், (எ - று.)

     இருவர் குதிரைகளும் சாரிகை சுற்றின ; இருவரும் போர்  செய்யத்  தொடங்கினர்
என்க.

(237)