சுவலனசடி | 137. | 1மற்ற மாந கர்க்குவேந்தன் மான யானை மன்னர்கோன் அற்ற மின்றி நின்றசீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான் முற்று முன்ச டிப் 2பெயர்சொன் மூன்று லஃகு 3மான்றெழப் பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார். | (இ - ள்.) அ மா நகர்க்கு வேந்தன் - அந்தப் பெரிய இரதநூபுரச் சக்கரவாளத்திற்கு அரச னாவான்; மானயானை மன்னர்கோன் - பெருமைமிக்க யானையையுடைய அரசர்க்கரசன்; அற்றம் இன்றி நின்றசீர் - அழிவில்லாமல் நிலைபெற்ற புகழையுடைய; முற்று முன்சடிப் பெயர்சொல் அழல்பெயர் புணர்ச்சியான் - முடிவதற்கு முன்னே சடியென்ற சொல்லோடு சேர்த்துச் சொல்லப்பெறுகிற தீயின் பெயராகிய சுவலனன் என்கிற பெயரை யுடையவன்; மூன்று உலஃகும் - மூவகை யுலகங்களும்; ஆன்றுஎழ - அமைந்து மேம்பட; பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் - பெற்றுநின்ற பெருமையை யுடையவனது உயரிய தன்மைகளை யாவர் எடுத்துக் கூற வல்லவர்? (எ - று.) மற்று : அசை. எனவே அவன் பெயர் சுவலனசடி என்றாராயிற்று. அவனுடைய பெருமை எடுத்துக் கூறுவதற்கு அருமையானது என்பதாம். “இப்பால் விஜயார்த்த பர்வத தக்ஷிணறோணியில் ரதநூபுர சக்கரவாள நகரத்து நமிஸந்தாநத்து வித்யாதர ராஜா, ஜ்வலநஜடி மஹாராஜன்“ என்பது ஸ்ரீபுராணம். சுவலன - என்னுஞ்சொல்லை அழற்பெயர் எனத் தமிழில் மொழிபெயர்த்தார். | ( 19 ) | | |
|
|