1370. அற்ற 1குந்த வில்லினாற்
செற்ற லன்றெ ழித்துமேற்
கொற்ற வன்றன் 2கோகின்மேல்
3வெற்றி வாளின் வீசினான்.
     (இ - ள்.) குந்தம் வில்லினால் - தன் குந்தமும் வில்லும், அற்ற - அற்றனவாதல்
காரணமாக, செற்றலன் தெழித்து - அப் பகைவனாகிய சிறீசேனன் உங்கரித்து, மேல் -
அப்புறம், கொற்றவன்றன் கோகின்மேல் - சிறீபாலனுடைய தோளின் மேலே, வெற்றி
வாளின் - தனது வெற்றியுடைய வாளை, வீசினான் - வீசுவானாயினன், (எ - று.)

     செற்றலன் - சிறீசேனன், அவன் தெழித்தமைக்கு அற்ற குந்தம் வில் இரண்டும் ஏது
வென்பார் வில்லினால் என, ஆல் உருபு கொடுத்தார். சிறீசேனன் உங்காரஞ்செய்து
சிறீபாலன் தோளின்மேல் வெற்றிவாள் வீசினன் என்க.

(240)