1373. | இட்ட 1வாளி றுத்தபின் விட்ட மாவின் 2மேற்செலாத் துட்ட 3மாத்து ரந்தனன் மட்டு வார்ந்த மாலையான். | (இ - ள்.) இட்டவாள் இறுத்தபின் - இவ்வாறு தான் வீசிய வாளைச் சிறீபாலன் துகளாக்கிய பின்னர், விட்டமாவின் - சிறீபாலன் ஊர்ந்த குதிரைக்கு, மேற்செலா - மேலே செல்லும்படி, துட்டமா துரந்தனன் - தனது கொடிய குதிரையை வானத்தே செலுத்தினான், மட்டுவார்ந்த மாலையான் - தேன் பொழியும் மாலையணிந்த சிறீசேனன், என்பான், (எ - று.) சிறீபாலன் தனது வாளைத் துகளாக்கியவுடன் சிறீசேனன் தன் குதிரையைச் சிறீபாலன் குதிரைக்கு மேலே செல்லும்படி செலுத்தினான் என்க. துஷ்டமா - துட்டமா என நின்றது. | (243) | | |
|
|