1374. | மாதி போகு மானமா மீது போக விட்டவன் சோதி 4கூடு சுடர்முடிக் கேத மாக வெண்ணினான். | (இ - ள்.) மாதிபோகும் மானமா - மண்டலமாக ஓடுகின்ற வலிய குதிரையை, மீது போகவிட்டவன் - உயரச் செல்லும்படி செலுத்திய சிறீசேனனுடைய, சோதிகூடு சுடர்முடிக்கு - மிக்க சுடருடைய முடிக்கலன் அணிந்த தலைக்கு, ஏதம் ஆக - கேடு உண்டாக என, எண்ணினான் - சிறீபாலன் கருதினான், (எ - று.) மாதி - குதிரையின் நடைவகையுள் ஒன்று. சுடர்முடிக்கு ஏதமாக எண்ணுதலாவது:- தலையை அரிய வேண்டும் என்று கருதுதல் என்க. | (244) | | |
|
|