இதுவுமது | 1381 | மதிதொடு நெடுவரை 3மான விஞ்சையர் விதிபடு 4மனிசரை வெருவி மீண்டனர் அதிசய மிதுவென வலர நக்கனன் கதிர்விடு வளையெயி றுடைய காளையே. | (இ - ள்.) மதிதொடு நெடுவரை - திங்களைத் தொடுமாறுயர்ந்த நீளிய மலைகளிலே வாழும், மான விஞ்சையர் - மானம் மிக்க விச்சாதரர்கள், விதிபடு மனிசரை வெருவி - நம் விதியிலே அகப்பட்டு வாழும் எளிய மானிடரை அஞ்சி, மீண்டனர் - மீள்வாராயினர்!, இது அதிசயம் - இச்செயல் வியப்புடைத்து, என - என்று கூறி, அலர நக்கனன் - பெருகச் சிரித்தான், கதிர் விடுவளை யெயிறு உடைய காளையே - சுடருகின்ற கோரப் பற்களையுடைய கனகசித்திரன், (எ - று.) விதிபடு மனிசர் - விச்சாதரருக்குத் திறைகொடுத்து அவருடைய ஆணையிலே அடங்கி வாழும் மனிதர் என்க. நக்கனன் என்றதற்கேற்பக் கதிர்விடு வளை யெயிறுடைய காளை என்றார். நமது ஆணைக்கடங்கி அஞ்சிவாழும் மனிசரை யாம் அஞ்சுதல் புலி புல்வாய்க் கஞ்சினாற்போன்றதொரு வியப்புடைத்தென்பான். அதிசயம் இது என்றான் என்க. | (251) | | |
|
|