1398. | மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் 2தண்டினாற் பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின் கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத் தோடுடைந் தொருவழித் 3தொகுத லொத்தவே. | இ - ள்.) மாடு அடைந்து - தம் பக்கலிலே எய்தி, பீடு அடைந்தவர் - மறமாண்புடையோர், தம் வயிரத்தண்டினால் - தமது வயிரமணியாலியன்ற தடியாலே, பிடர்புடைப்ப - தம் எருத்திலே தாக்க, ஆனையின் - யானைகளின், உடைந்து உதிர்ந்தன கோடு - நுறுங்கி உதிர்ந்த கொம்புகள், கொடுமுள் - வளைந்த முட்களையுடைய, கேதகை - வெள்ளைத்தாழை மலர்களின், தோடுடைந்து - இதழ்கள் சிதறி, ஒருவழி - ஓரிடத்தே, தொகுதல் - குவிதலை, ஒத்தவே - ஒத்திருந்தன, (எ - று.) வீரர்கள் வயிரத் தண்டாலே மோதினமையால் நுறுங்கி உதிர்ந்த யானைமருப்புக்கள் வெண்டாழை மலர்த்தோடு சிதறிக் குவிந்ததை ஒத்திருந்தன என்பதாம். | (268) | | |
|
|