அச்சுவகண்டன் தம்பியர் ஈண்டுப் போர்செய்வான்
யாவன் எனல்

1409. வெளியவன் 2மிளிர்மரை புரையுஞ் செங்கணான்
3அளியின னமர்க்களங் கடாக்கொள் கின்றவவ்
விளையவன் யாரென வினவிக் கேட்டனர்
கிளையமர் கிரீவனுக் கிளைய வீரரே.
     (இ - ள்.) வெளியன் - வெள்ளைநிறம் உடையானும், மிளிர்மரை புரையும்
செங்கணான் - திகழ்கின்ற செந்தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களை உடையானும்,
அளியினன் - நம்மால் இரங்கத்தக்கானும், அமர்க்களம் கடாக்கொள்கின்ற, போர்க்களத்தே
5கடாவிடுகின்றவனும் ஆகிய, அவ் விளையவன் யார் - அந்த இளமை மிக்கோன்
யாவனோ, என வினவிக் கேட்டனர் - என்று வினவினார், கிளை அமர் - சுற்றத்தாரை
விரும்புகின்ற, கிரீவனுக்கு இளையவீரர் - அச்சுவகண்டனுக்குத் தம்பியர் ஆயினோர்,
 (எ - று.)

     கடாவிடுதல் - துவைத்தல். வெள்ளை நிறமுடையவனும் செங்கணானும் நம்
இரக்கத்திற்குரியவனும் பெரும்போர் ஆற்றுபவனுமாகிய இவன் யாரென அச்சுவகண்டன்
தம்பியர் விசயனைச் சுட்டித் தம் மயலோரை வினவினர் என்க.

     அளியினன், என்றார் தம்மாற் கொலையுண்பான் என்பது தோன்ற.
விசயன் எனக் கேட்டலும் நால்வரும் ஒருங்கே வருதல்

(279)