விசயனை அந்நால்வரும் வளைத்துக் கோடல் | 1411 | இரத்தின கண்டனு மேனை வீரரும் வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம் எரித்தனர் நால்வரு மிளைய காளையை முரித்திடு முனிவின ராகி முற்றினார். | (இ - ள்.) இரத்தின கண்டனும் - மணிகண்டனும், ஏனை வீரரும் - மற்றைய மறவர்களும், வருபடை - தம்மோடுவரும் படையை, வரைத்தனர் - கூறுபடுத்துக் கொண்டவராய், வீதிவாய் எலாம் - தாம் செல்லும் வழியெல்லாம், எரித்தனர் - தீயால் எரித்தனராய், நால்வரும் - அச்சுவகண்டனுடைய நான்கு தம்பிமார்களும், இளைய காளையை - விசயனை, முரித்திடு முனிவினர் ஆகி - கொன்றுவிடுதற்குரியதொரு பெருஞ்சினம் உடையராய், முற்றினார் - வளைத்துக்கொண்டனர், (எ - று.) ஈண்டும் இளமை பருவங்குறித்து நின்றது. முரித்தல் - அழித்தல்; கொல்லுதல். இரத்தினகண்டன் முதலிய அச்சுவகண்டன் தம்பியர், விசயனைக் கொன்றொழிக்கும் கருத்துடன் சினமிக்கு வளைத்துக்கொண்டனர் என்க. | (281) | | |
|
|