மணிகண்டன் முதலிய நால்வருடனும் கனகசித்திரன்
வந்து கூடுதல்

1416. ஒருவனோர் நாஞ்சிலா லூழித் தீப்புரை
இருவரோ டிருவரை யானை2 நான்கொடு
செருவினு ளமர்வெலக் கேட்டுச் சேர்ந்தனன்
கருவரை யனையதோட் 3கனக காமனே.
     (இ - ள்.) ஒருவன் ஓர் நாஞ்சிலால் - மறவனும் ஒரோ ஒருத்தன், அவன் படையும்
ஒரோஓர் கலப்பை, அக்கலப்பையாலே, ஊழித் தீப்புரை - ஊழிக்காலத்துப் பெருந்தீயையே
ஒத்த, இருவரோடு இருவரை - தன் சிறு தந்தையராகிய நீலகண்டன் முதலிய நால்வரையும்,
யானை நான்கொடு - அவர்கள் ஊர்ந்துசென்ற நான்கு யானைகளோடும், செருவினுள் -
போர்க்களத்தே, அமர் வெலக்கேட்டு - போர்த்தொழில் செய்து வென்றான் எனக்கண்டோர்
கூறக்கேட்டு, சேர்ந்தனன் - வந்து அவர்கட்குத் துணையாய் எய்தினான், கருவரை அனைய
தோள் கனககாமன் - அவன் யாரெனில் கரிய மலைபோலும் தோள்களையுடைய
கனகசித்திரன் என்னும் காமவேளை ஒப்பான், (எ - று.)

     தன் இளந்தந்தையர் விசயன்முன் ஆற்றாது வீழ்ந்தமை கண்டு கனக சித்திரன் வந்து
எதிர்ந்தான் என்க.

 (286)