(இ - ள்.) வடிய - கூரிய; வாளவன் ஆளவும் - வாட்படையை யுடைய சுவலனசடி மன்னன் அரசாட்சி செய்யவும்; வாய்களில் கடியவாயின - வாய்களால் நறுமணமுடையனவாயன; கள்அவிழ் தேமலர் - தேனை வெளிப்படுத்தும் நறுமலர்களாகும்; அடியவாய் - அடியிடத்திலே; பயப்பட்டு - நீர் ஊற்றப்பெற்று - அடங்கா அலர்க் கொடியவாயின - மிகுந்த மலரைக் கொண்ட கொடிகள் பொருந்தப் பெற்றவைகள்; கொங்கு அவிழ் சோலை - மணத்தை வெளிப்படுத்துகிற பொழில்களேயாம், (எ - று.) வாய்களில் கடிய வாயின - வாய்களாற் கடுமையையுடையனவாயின; அடியவாய் - அடிக்கப்பெற்றவைகளாய்; பயப்பட்டு - அஞ்சி; அடங்கா - அடங்காமல்; அலர்க்கொடியவாயின - பழிதூற்றுங் கொடுமையையுடையன வாயின; என்ற வேறு பொருளுங் காண்க. அந் நாட்டில் கடுஞ்சொற் கூறுவோரும், அடிபடுவோரும், பிறரை இகழ்ந்து பழித்துரைப்போரும் இலர் என்பது இதனால் உரைக்கப்பட்டது. |