அச்சுவகண்டன் அரவக்கணை விடுதல்

1451. காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல்
ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக
மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச்
சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே.
மாயிரும் புகழி னான்றன் வன்சிலை 1வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித்
தீயுமிழ்ந் தோடிற் றன்றே.

     (இ - ள்.) காய் இரும்பு அனைய வெய்யோன் - பழுக்கக் காய்ச்சப்பட்ட
இரும்புபோன்ற கொடியவனாகிய அச்சுவகண்டன், கருமணிவண்ணன் தன்மேல் - நீலமணி
போன்ற நிறமுடைய திவிட்டன்மேல், ஆயிரம் பணத்ததாய - ஓராயிரம்
படங்களையுடையதாகிய, அருமணி ஆடும் நாகம் - பெறற்கரும் மணியையுடைய
ஆடுகின்றதொரு பாம்பாகிய அம்பினை, மாயிரும் புகழினான்றன் வன்சிலை - மிக்க
புகழையுடைய தனது வலிய வில்லை, வாங்கி எய்ய - வளைத்து எய்ய, சேய் இருஞ்சுடர்கள்
சிந்தி - சிவந்த பெரிய ஒளிச்சுடரைச் சிதறி, தீயுமிழ்ந்து ஓடிற்று - தீக்கான்று பாய்ந்தது,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     அச்சுவகண்டன் ஆயிரந் தலையையுடைய அரவக் கணையை நம்பி மேற்
றொடுத்தான் அது தீயைச் சிதறிக்கொண்டு நம்பிமேல் வந்ததென்க.

(321)