திவிட்டன் வருணக்கணையால் அதனை அவித்தல் | 1454. | காரணி வண்ணன் கண்டே கதிர்மணிக் கடகக் கையால் வாருண மென்னு மம்பு வாங்கினன் றொடுத்த லோடும் சீரணி விசும்பு மண்ணுந் திசைகளு மிருளச் 2சேர்ந்து நீரணி புயலின் றாரை நிரந்து வீழ்ந் தவித்த தன்றே. | (இ - ள்.) கார் அணி வண்ணன் கண்டே - முகில் போன்று அழகிய நிறமமைந்த திவிட்டன் அத் தீக்கணை வருதலைப் பார்த்து, கதிர்மணிக் கடகக் கையால் - ஒளியுடைய மணிகள் அழுத்திய கடகம் பூண்ட தன்கையாலே, வாருணம் என்னும் அம்பு வாங்கினன் - வாருணம் என்று கூறப்படும் நீர்க்கணை ஒன்றனைத் தன் தூணியினின்றும் எடுத்து, தொடுத்தலோடும் - அதற்கு எதிராகத் தொடுத்தவுனே, சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருளச் சேர்ந்து - புகழுடைய விண்ணும் நிலவுலகும் திக்குகளும் இருண்டு போம்படி எய்தி, நீர் அணி புயலின் தாரை - நீரால் அழகுடைத்தாய புயல்துளிக்கும் தாரைபோன்ற தாரைகளை, நிரந்து - எவ்விடத்தும் பரப்பி, வீழ்ந்து - வீழ்த்தி, அவித்ததுஅன்றே - அத்தீக்கணையை அவித்தொழித்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) அச்சுவகண்டன் எய்த தீக்கணையை நம்பி வருணக்கணை யேவி அவித்தான் என்க. | (324) | | |
|
|