1465. | நெருநல் நெடுங்குடைக்கீழ் நேமி முன்செல்லப் பொருநல் வயவேந்தர் போற்றிசைப்ப வந்தான் செருநன் மறநேமி சென்றதுவே போழ எரிபொன் மணிமுடியா னின்றிவனோ சாய்ந்தான். | (இ - ள்.) நெருநல் - நேற்று, நெடுங்குடைக்கீழ் - நீண்ட திங்கட்குடையின் கீழே அமர்ந்து, நேமிமுன் செல்ல - தன் ஆழிப்படை தன்னைக் காத்துத் தன் முன்பே செல்லா நிற்ப, பொருநல்வய வேந்தர் - போர்செய்யும் நல்ல ஆற்றலுடைய அரசர்கள், போற்றிசைப்ப வந்தான் - வாழ்ந்தெடுக்குமாறு வந்தனன், செருநன்மற நேமி - போரிடத்தே நல்ல ஆற்றலுடைய ஆழிப்படை, சென்றது - நெருநல் தனக்குத்துணையாய்த் தன்முன் சென்ற அதுவே, போழ - தன் மார்பத்தைப்பிளக்க, எரிபொன் மணிமுடியான் - விளங்குகின்ற பொன்னாலும் மணியாலும் இயன்ற முடியை உடைய அச்சுவகண்டன், இன்று - இற்றை நாள், இவனோ சாய்ந்தான் - இத்தகைய பெருமையுடையோனும் இறந்தொழிந்தான், (எ - று.) யாக்கை செல்வங்களின் நிலையாமை இருந்தவாற்றை உணருங்கோள் என்பது குறிப்பெச்சம். “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு“ (திருக். - 336) என்னும் பொய்யாமொழியை ஈண்டு நினைவு கூர்க. | (335) | | |
|
|