1466. | தானெறிந்த நேமி தனக்கே 1பகையாகித் தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் 2வீடினான் யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில் வானறிந்த 3வாழ்க்கையு மாயமே போலுமால். | (இ - ள்.) தான் எறிந்த நேமி - தன் பகைவனைக் கொல்லும் பொருட்டுத் தான் ஏவிய தன்னுடைய ஆழிப்படை, தனக்கே பகையாகி - தன்னையே கொல்லும் பகையாக மாறிவிட, தேன் எறிந்த தாரான் - தேன் துளிக்கும் மலர்மாலையை அணிந்த அச்சுவகண்டன், சிறுவரைக்கண் - சிறியதொரு கால எல்லையினகத்தே, வீடினான் - மாண்டொழிந்தான், யான் அறிந்தவாற்றால் - என்னுடைய சிற்றறிவானே யான் அறிந்து கொள்ளுந்துணை, எளிய இவ்வுலகத்தில் - ஏழ்மையுடைய இம்மண்ணுலகத்தே, வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே - தேவர்கள் அறியச் சிறப்புற்றமர்ந்த வாழ்க்கையும் பொய்யே ஆயிற்று, போலும் : ஒப்பில் போலி, (எ - று.) மாயவித்தையைப் போன்ற தெனினும் ஆம். “மணி மாடம் மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே வந்ததோர் வாழ்வு மோர் இந்திரசாலக் கோலம்“ என்பர் தாயுமானார். | (336) | | |
|
|