வான் தருமொழி (அசரீரி வாக்கு) | 1487. | அரிதினி னவனெய்த தெய்வ வம்புக ளுரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது பெரிதிது சித்திர மென்று பேரொலி விரிதரு விசும்பிடை விரவி 1நின்றதே | (இ - ள்.) அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள் - விலக்கரியதோர் ஆற்றானே அவ்வச்சுவகண்டன் விடுத்த கடவுட் டன்மையுடைய அம்புகளை, உரிதினின் - தனக்குரிய அம்பினாலே, அறுத்து - அறும்படி மாற்றி, ஒளிர் நேமி கொண்டது இது - திகழுகின்ற அவனது ஆழிப்படையைத் தனதாக்கிக் கொண்ட இச்செய்கை, பெரிது சித்திரம் - பெரிதும் வியத்தற்குரியதாயிருந்தது, என்று - என்று கூறியதோர், பேரொலி - பெரிய முழக்கம், விரிதரு விசும்பிடை - அகன்ற வான்முழுதும், விரவி நின்றதே - பரவி நிற்பதாயிற்று, (எ - று.) அச்சுவகண்டன் விடுத்த தடுத்தற்கரிய தெய்வக் கணைகளைத் தடுத்து அவனது ஆழிப்படையைத் தனதாக் கொண்டேவிய செயல் வியப்புடைத்தென்று வான்மொழி கூறிய பேரொலி விசும்பு முழுதும் பரவிற் றென்க. | (357) | | |
|
|