பயாபதி மக்களின் முடிசூட்டுவிழவினைக் காண விழைதல் | 1493. | தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் தாதையென் 1றியலுரை தவத்தி னெய்தினேன் ஆதலா 2லிவர்தம தரச கோலமெங் காதலங் கண்ணிவை காண 3லாகுமே. | (இ - ள்.) தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் - குற்றமற்ற மணிகளானியன்ற கோமுடியினை உடைய செல்வமிக்க இவ் விசய திவிட்டர்களின், தாதை என்று - தந்தையாவான் பயாபதி என்னும், இயலுரை - நிகழாநின்ற புகழ்மொழியை, தவத்தின் - மேலைத்தவப்பயனானே, எய்தினேன் - பெற்றுள்ளேன். ஆதலால் - ஆகையாலே, இவர் தமது -இவருடைய, அரசகோலம் - திருமுடி சூட்டும் எழிலும், காதலங்கண் இவை - காண வேணவாவுடைய இந்தக் கண்கள், காணல் ஆகுமே - கண்டு மகிழ்தலும் இயல்வதேயாம், (எ - று.) இவர்க்குத் தாதையாக்கிய தவம், இதனையும் காட்டுமாகலின், காணலாகும் என்றான் என்க. | (363) | | |
|
|