களி யாட்டம் | வேறு | 1540. | இன்னன பலவுங் காட்டி யிளையவர் காணும் போழ்தின் மன்னவ 1ர் மன்னர் தம்மேன் மாலையு மலருஞ் சிந்தி 2மின்னவிர் சிவிறி தம்மால் விரைபொழி தாரை வீக்கித் தொன்னக ரார்வ மென்னுங் களித்தொழி றொடக்கிற் றன்றே. | (இ - ள்.) இன்னன - இவை போல்வன, பலவும் காட்டி - பற்பல அழகையும் எடுத்துக் கூறி, இளையவர் - இளமகளிர்கள், காணும் போழ்தில் - உலாக் காட்சியைக் கண்டு மகிழும்போது, மன்னவர் - அரசர்கள், மன்னர் தம்மேல் - ஏனைய அரசர் மேலே, மாலையும் மலரும் சிந்தி - மலர் மாலைகளையும் விடுபூக்களையும் வீசியும், மின்னவிர் சிவிறி தம்மால் - ஒளிர்கின்ற துருத்திகளாலே, விரை பொழி தாரை வீக்கி - மணங்கலந்த நீர்த்தாரைகளை வீசியும் வர இவ்வாற்றால், தொன்னகர் - பழைதாகிய போதன நகரம், ஆர்வம் என்னும் - வெற்றியால் விளைந்த விழைவு என்கிற, களித்தொழில் - களியாட்டமாகிய தொழிலை, தொடங்கிற்று அன்றே - ஆடத் தொடங்கியது; அன்று, ஏ: அசை, (எ - று.) மகளிர்கள் ஒருவர்க் கொருவர் இவ்வாறு திருவுலாக் காட்சியைக் காட்டி மகிழும்போது வெற்றியாலே களிப்புற்ற அரசர்கள், தம்முள் மாலையும் மலரும் சிந்தி, தாரை வீக்கியும்வர, இவ்வாறு, தொன்னகரத்தே களியாட்டம் தொடங்கிற் றென்க. | (410) | | |
|
|