155. கொங்கை போதரு வான்குமிழ்க் கின்றன
அங்க ரா 2கம ணிந்ததை யன்றியும்
நங்கை 3நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே.
 

     (இ - ள்.) நங்கை - சுயம்பிரபையை, கொங்கை போதருவான் - முலைகள்
வளர்தற்பொருட்டு; குமிழ்கின்றன - அரும்புகின்றவற்றின்மேல்; அங்கராகம் அணிந்ததை
அன்றியும் - நறுமணப்பொடிகள் பூசப்பட்ட செயலே அல்லாமலும்; நாகரிகப் பொறை -
நாகரிகங் கருதியிடப்பட்ட அணிகலச் சுமையும்; நாள் மது தங்கு வார் கொடியில்
தளர்வித்தது - புதிய தேன் தங்குதற்கிடமான நீண்ட பூங்கொடி தளருமாறு தளரச் செய்தது, (எ- று.)

     இது சுயம்பிரபை மணப்பருவ மெய்தினமை கூறிற்று. குமிழ்க்கின்றன; வினையாலணையும் பெயர். அங்கராகம் மெய்ப்பூச்சு. நாகரிகப் பொறை என்றது
அணிகலன்களை.
 

( 37 )