1558. | தேங்கமழ் தெய்வச் செம்பொற் றாமரை சுரிவெண் 1சங்க மீங்கிவை நெதிக ளாக 2வேழர தனங்க ளெய்தி யாங்கமர் செல்வந் 3தம்மா லற்றைக்கன் றமர்ந்த மாதோ வோங்கின னுருவத் தாலும் வில்லெண்ப துயர்ந்த தோளான். | (இ - ள்.) உருவத்தாலும் - திருமேனியினாலும், எண்பது வில் உயர்ந்த தேளான் - எண்பது வில்லின் அளவு உயர்ந்த தோளையுடைய திவிட்டன், தேம் கமழ் தெய்வச் செம்பொற்றாமரை - தேன்மணங்கமழும் கடவுட்டன்மை யுடைய பதும நிதியும், சுரிவெண்சங்கம் - சுரிந்த முகத்தையுடைய சங்கநிதி யும், ஈங்கிவை - என்று கூறப்படுகின்ற இரண்டும், நெதிகளாக - தன் கருவூல முதற்பொருளாய் அமைய, ஏழரதனங்கள் எய்தி -இருகூற்று ஏழுமணிகளையும் பெற்று, அற்றைக்கன்று - நாள்தோறும், ஆங்கு அமர் செல்வம் தம்மால் - ஆண்டு உள்ளனவாகிய செல்வமாகிய, இருவகை நிதிகளாலும், அமர்ந்த - தாம் விரும்பிய விரும்பியபடியே எய்தி, ஓங்கினன் - சிறந்தான், (எ - று.) இருவகைய எவ் வேழுமணிகளாவன, உயிர் மணியேழும் உயிரில்மணி ஏழுமாம், அவையாவன:- கிரகபதி, சேனாபதி, விஸ்வகர்மா, புரோகிதன், அசுவம், கஜம், ஸ்திரீ. இவ்வேழும் சீவரத்னமென்ப; சக்கரம், குடை, வாள், தண்டம், சூடாமணி, சர்மம், காகிணி - இவ் வேழும், அசீவ ரத்ன மென்ப. புகழானே யன்றி உருவத்தாலும் எண்பது வில்லுயர்ந்த நம்பி என்க. வில், ஓர் அளவு கருவி. “ஐவிலின் கிடக்கை“ என்றார் மணிமேகலையினும். எய்தி என்னும் சொல் பின்னும் கூட்டப்பட்டது. | (428) | | |
|
|