(இ - ள்.) நறுங்குழல் மங்கைமார் பலர் - நன்மணம்மிக்க கூந்தலையுடைய தோழிப் பெண்கள்பலர்; மங்குல்தோய் - முகில்கள் படியப் பெற்ற; வரைமன்னவன் தொல்குடி நங்கை போற்றி என்று ஏத்தி - வெள்ளிமலை யரசனது பழைமையான குடியில் தோன்றிய பெண்ணே வாழ்வாயாக என்று கூறி வணங்கி; காப்ப - பாதுகாக்க; வளர்ந்து - மேன் மேலுஞ்சிறந்து; தன் கொங்கையால் - தன்னுடைய கொங்கைகளின் சுமையால்; சிறிதே குழைவு எய்தினாள் - ஒரு சிறிதளவே தளர்ச்சியடைந்தாள், (எ - று.) வளர்ச்சியை அடைந்த சுயம்பிரபை, தன்கொங்கைச் சுமையால் சிறிதே தளர்ச்சியை அடைந்தனள் என்க. வரை - வெள்ளிமலை. மன்னவன் - சடியரசன். |