சுயம்பிரபை, பாரிசாத மணத்தினைத் திவிட்டற்கு அறிவிக்கத் தோழியை விடுதல் | 1562. | சுரும்பிவர் சோலை வேலித் துணர்விரி பாரி சாதம் அரும்பிய பருவச் செல்வ மடிகளுக் கறிவி யென்று 1பெரும்பிணா வொருத்தி தன்னைப் பெய்வளை 2விடுத லோடும் விரும்பினள் சென்று வேந்தற் கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள். | (இ - ள்.) வேலி - காவல் வேலியை உடைய, சுரும்பு இவர் சோலை - வண்டுகள் மொய்க்கின்ற நம் பூம்பொழிற்கண், துணர்விரி பாரிசாதம் - கொத்துக்களை விரித்தெழுகின்ற பாரிசாத மரக்கன்று, அரும்பிய செல்வப் பருவம் - அரும்புகின்ற செல்வமாகிய இளம்பருவம் எய்திய செய்தியை, அடிகளுக்கு அறிவி என்று - நந்தலைவராகிய திவிட்ட அடிகளுக்கு இயம்பு வாயாக என்று பணித்து, பெய்வளை - சுயம்பிரபை, பெரும்பிணா ஒருத்திதன்னை - பெரிய தோழி ஒருத்தியை, விடுத்தலோடும் - ஏவியவுடன், விரும்பினள் சென்று - அவளும் விருப்பத்தோடே போய், வேந்தற்கு - திவிட்டனுக்கு, இறைஞ்சி - வணங்கி, விண்ணப்பம் செய்தாள் - அச்செய்தியை அறிவித்தனள், (எ - று.) துணர் விரி பாரிசாதம் அரும்பெடுத்து மணப்பருவம் எய்திய செய்தியை, அடிகட்கு அறிவி, என்று நங்கை கூற, ஒருசிலதி விருப்பத் தோடே சென்று அச் செய்தியை நம்பிக்குக் கூறினாள் என்க. “பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய“ என்பதோத்தாகலின் பெரும்பிணா ஒருத்தி என்றார். பிணாப்பிள்ளைகாள் என்று பிறரும் கூறினர். | (432) | | |
|
|